அப்பாஸ்! இதுஉண்மையா?
Hats off to Abbas!

செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்பாஸ் பாராட்டுக்கு உரியவர். ஏனென்றால், அவர் தனது சினிமா புகழையும் பேரையும் தவறாகப் பயன்படுத்தி, ஏதோ ஒரு வகையில் அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்க விரும்பாமல் நேர்மையாகப் பிழைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அப்பாஸின் மன உறுதியை மட்டும் காட்டவில்லை. அவரது பெற்றோர்கள் அவரை ஒரு சிறந்த மகனாக, மனிதனாக வளர்த்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
வாழ்வின் நோக்கமே நாம் எவ்வளவு வசதியாக வாழ்கிறோம் என்பதில் இல்லை, எவ்வளவு உண்மையாக வாழ்கிறோம் என்பதில்தான் உள்ளது.
நிழல்கள் சில சமயம் நிஜங்களை விட ஆச்சரியம் தரவல்லது. ஆம், நிகழ்வுகள் சில சமயங்களில் நிஜத்தை மிஞ்சி விடும்!
செய்தி!
"மிகவும் பரிதாபமான நடிகர் யார்"
quora.com, Sep. 5, 2023. 6.14 PM
புகழ் இருக்கும் அளவுக்கு முன்னனி நடிகர் நடிகையாக இல்லாதவர்களுக்கு வருமானம் இருப்பதில்லை. வாய்ப்புகளுக்காக பலரையும் மனநிறைவு செய்ய முயன்று தங்கள் பொருளாதார மற்றும் குடும்ப நிலையை பாழ் படுத்திக் கொள்கின்றனர்.
புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி பெரும் செல்வந்தராக மாற வாய்ப்பு இருந்தும் அனைத்தையும் இழந்து பெட்ரோல் நிரப்பும் பணியாளர் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அப்பாஸை கூறலாம். இருப்பினும் அவர் தனது பரிதாப நிலையை எண்ணி வருந்தாமல் எளிய வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு அதன் படி வாழ்ந்தும் வருவதால் "தன்னம்பிக்கை மனிதர்" என்றே அவரை கூறலாம்.
Hats off to Abbas!
- திரைபாரதி