கொடநாடுவெள்ளைமாளிகை

எண்ணச்சிதறல்கள்

 | 
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்!
காலம்கடந்தநீதிமறுக்கப்பட்டநீதிக்குச்சமம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் "ஜெ" வுக்காக மிகவும் அதிகப் படியான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப் பட்டதுதான் கொடநாடு வெள்ளை மாளிகை. அந்த மாளிகையில்தான் கொள்ளை, அதைத் தொடர்ந்து கொலைகள், சந்தேகத்துக் கிடமான தற்கொலைகள் என்று என்னென்னவோ சங்கதிகள் நடந்தேறின; அதுவும் அதிமுக ஆட்சியில். இபிஎஸ்சின் வெற்றிகள் யாவும் எம்ஜியாரின் தோல்விகள் என்று காலம் நமக்கு உணர்த்துகிறது!

 

அது மட்டுமல்ல, நாளை கொடநாடு விவகாரமானது திராவிட இயக்கத்திற்கும்  ஒரு தோல்வியாகவே முடியும். வானளாவிய அதிகாரங்களால் ஆவதொன்றுமில்லை!

 

"பசுமாட்டின் பால்மடியை பனாமா பிளேடினால் அறுத்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டு. ஆனால், செய்நன்றி கொன்றவர்க்கு பிராயச்சித்தமே இல்லை" என்று 'செய்நன்றி மறவாமை' பற்றிப் பள்ளியிலே நெல்லை சங்கரலிங்கம் என்ற தமிழாசிரியர் பாடம் எடுத்தது நினைவுக்கு வருகிறது. நமக்கு நன்மை செய்தவன் நல்லவனோ கெட்டவனோ, அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது மானுட தர்மம். இதற்கு மேல் இதைப்பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை.

 

உலகிலேயே மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோஆனால், நம்பிக்கை துரோகத்தின் மூலம், பணத்தை மட்டுமே பிரதானமான ஆயுதமாக வைத்து அரசியல் உச்சத்தில் இபிஎஸ்சைத் தவிர சரித்திரத்தில் வேறு யாருமே இருந்ததில்லை! இது நீடிப்பது கட்சிக்கோ மக்களுக்கோ நல்லதா என்று எமக்குத் தெரியவில்லை.

 

அது போகட்டும், கொடநாட்டு கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படுவதற்கு முகாந்திரமுள்ளவர்களுடன், இவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் நூறு தடவைகளுக்கு மேல் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இதுதான் இவருடைய யோக்கியதை! இபிஎஸ் க்கு எதுவுமே தெரியாதா? தெரியாது என்றால், அவர் முதல்வர் பதவிக்குத் தகுதியானவரா?

 

'சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்' என்று இவர் பேசியதைக் கேட்டபோது 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?' என்ற விவேக்கின் காமெடிதான் நினைவுக்கு வந்தது!

 

வெ.. நிர்மலாவிற்கு இடமில்லாத மேலவையே தேவையில்லை என்று முடிவெடுத்தவர்தான் எம்ஜியார். அவர் கலைஞரைக் கைது செய்து கால் சட்டையுடன் சிறையில் அடைத்தார் என்றும் சொல்வார்கள். எம்ஜியாரை கலைஞர் சாடிஸ்ட் என்று வர்ணித்ததும் உண்டு. ஆனால், எம்ஜியார் ஒரு மனித நேயர், எழைப் பங்காளர் என்பதில் மாற்றுக் கட்சியினருக்கும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை

 

தொப்பியை வைத்துக் கொண்டால் இபிஎஸ் எம்ஜியாருக்கு வாரிசாகி விட முடியுமாஆளில்லாத இடத்தில் அதட்டிப் பேசிவிட்டால் அவரால் 'ஜெ' ஆகிவிட முடியுமாசி. சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்ற மாற்றுக் கருத்து இருந்தவர்களையும் காமராஜர் மதித்து நடத்தினார். ஏனென்றால் அவர் மக்கள் தலைவர். இவரைப் போல யாரைக் கண்டும் அவர் அஞ்சியதில்லை

எடப்பாடியார் எந்த வகையில் சேர்த்தி? இஷ்டத்துக்கு முடிவெடுக்க இபிஎஸ் ஒன்றும் எம்ஜியார் இல்லை!

எதையும் செய்யத் துணிந்த இபிஎஸ், எல்லாவற்றையுமே தனது பதவியைக் காத்துக் கொள்ளவும், தன்னலனுக்காகவும்தான் செய்தார் என்பதில் அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் சற்றும் சந்தேகம் இல்லை! தொண்டர்களால் அமைந்த ஒரு கட்சியில் தற்போது நிலவுவது Confidence crisis!

இபிஎஸ் Vs காமராராஜர் ஓர் ஒப்பீடு:

"In the country of a stupid nation, the nation works for the politician's pocket. In the country of a wise nation, the politician works for the pocket of the nation!"

- Mehmet Murat ildan

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்! கொடநாடு மர்மக் கதை ஒரு முடிவுக்கு வருமா, அல்லது வழக்குக்கு மட்டும்தான் முடிவு வருமா என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஒரு வழக்குடன் வருடக் கணக்காக வாழமுடியுமா"ஜெ"