அனிகா சுரேந்திரன் : நடிகையாக தோன்றும் முதல் படத்திலேயே முத்தம், மது, படுக்கையறை என எல்லை மீறிய காட்சிகள்
அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடித்துள்ள 'ஓ மை டார்லிங்' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
Updated: Feb 9, 2023, 22:37 IST
| 
இந்தப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியானது. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரில் அனிகாவின் லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிககள் அதிகமாக இடம்பெற்றுள்ளது டிரெய்லரிலே தெரிகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகாவா இது அதிர்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அனிகாவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பிந்தது. மேலும் அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இரண்டாவது முறையாக அஜித்தின் மகளாக நடித்தார் அனிகா.
இதுதவிர தமிழில் விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்' படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாகவும், மிருதனில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கடைசியாக சீனு ராமாசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்' படத்தில் நடித்தார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அனிகா. அந்த வகையில் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள படம் 'ஓ மை டார்லிங்'. இந்தப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.